திமுக ஆட்சியில் மின்துறையில் 397 கோடிக்கு மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது; அண்ணாமலை.!
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார துறையில் ரூ.397 கோடிக்கு மிகப்பெரிய ஊழல், நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு வந்தபின், ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ரூ.397 கோடிக்கு மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் சந்தை மதிப்பை விட அதிக தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தை மதிப்பை விட 4 லட்சத்துக்கும் மேல் அதிக விலைக்கு ட்ரான்ஸ்பார்மர்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மின்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோர் சேர்ந்து, கிட்டத்தட்ட 397 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுகவின் அதிநவீன விஞ்ஞான ஊழல்!
மின்சாரத்துறையில் நடைபெற்ற மாபெரும் ஊழலை வெளிக் கொண்டு வந்த @Arappor இயக்கத்திற்கு @BJP4TamilNadu சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம். pic.twitter.com/6dUeQUOA8f
— K.Annamalai (@annamalai_k) July 6, 2023
மேலும் அமைச்சருக்கும், மின்வாரிய தலைமை அதிகரிக்கும் தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை, இதனால் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.