தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – தமிழக அரசு உத்தரவு…!
- தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இன்று பணியிட மாற்றம் செய்து,தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இன்று பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அந்த வகையில்,திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக,தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் – உள்துறை,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி – மீன்வளம் மற்றும் பால் வளத் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த மேகராஜ் – நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் – மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவாரூர் ஆட்சியராக இருந்த சாந்தா – நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கற்பகம் – வணிக வரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுந்தரவள்ளி – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.