Tamil Nadu fishermen [Image source : File image]
சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், நெடுந்தீவு அருகே 15 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இதனையடுத்து, இலங்கை கைது செய்த மீனவர்கள் 38 பேரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்த 38 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று 4 பேரும், இன்று 38 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர்கள் வீடு திரும்ப உள்ளனர்.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி
இதற்கிடையில், மீதமுள்ள 25 பேர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், இலங்கை சிறையில் அடைக்கப்படுள்ள அனைத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…
சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…