காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் 28-ஆம் நாளான இன்று அத்திவரதர் வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 நாட்களில், 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் மதியம் 1 மணி வரை அத்திவரதரை 1.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று அத்திவரதரை தரிசிக்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 33 பக்தர்கள் மயக்கமடைந்தனர். ஆகஸ்ட் 1 முதல் 20,000 பக்தர்களை நிறுத்தி வைத்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பயட்டுள்ளது. காலை 5 மணி முதலே அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…