நேற்றுவரை 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்-மாவட்ட ஆட்சியர் பொன்னையா

Default Image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு  காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் 28-ஆம் நாளான இன்று அத்திவரதர் வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 நாட்களில், 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் மதியம் 1 மணி வரை அத்திவரதரை 1.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று அத்திவரதரை தரிசிக்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 33 பக்தர்கள் மயக்கமடைந்தனர். ஆகஸ்ட் 1 முதல் 20,000 பக்தர்களை நிறுத்தி வைத்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பயட்டுள்ளது. காலை 5 மணி முதலே அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்