ஊதியம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் உரிமையாளர் வீட்டு முன் முற்றுகை ..,

Default Image

திருச்சி:தனியார் பாய்லர் தொழிற்சாலை ஒன்று திருச்சி துவாக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட  நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது. அதில் கடந்த வாரம் திங்கட்கிழமை 2 மாதம் ஊதியமும், ஏப்ரல் 7ம் தேதி 2 மாத நிலுவை ஊதியமும், மூன்று மாதத்திற்கு வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆனால் முதல் 2 மாத நிலுவை ஊதியம் கடந்த வாரம் திங்கட்கிழமை  வழங்கப்பட வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சங்க செயல்தலைவர் கவித்துவன், செயலாளர் மதியழகன் முன்னிலையில் அனைத்து தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன், நேற்று காலை 9 மணியளவில்  நிறுவன உரிமையாளர் வீட்டின்முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளைக்குள் (இன்று) 2 மாதம் ஊதியம் அனைவரது வங்கிகணக்கில் செலுத்தப்படும் மேலும்  நிபந்தனைகளும் சொன்னபடி நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணி வரை நீடித்த காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்அபகுதயில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi