சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இதுவரை 599 கோடி மதிப்பீட்டிலான 37 பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-2022-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிலை அறிக்கையை சட்ட பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 3 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் பாசனத்திற்கு பயன்படாத 500 ஏரிகளை பொதுப்பணித்துறை அனுமதியோடு ஆழப்படுத்தி, மழைக் காலங்களில் நீரை தேக்கி வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இதுவரை 599 கோடி மதிப்பீட்டிலான 37 பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 308 கோடி மதிப்பீட்டில் 5 பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்காக கணிசமாக பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என தெரிவித்தார்.
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…