சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகள் முடக்கம்..!
கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகம் 2017-21 நிதியாண்டு வரை ரூ.424 கோடி வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய தொகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
இதனால் இன்று சென்னை பல்கலைக்கழகத்தை சார்ந்த 37 வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கம் செய்துள்ளனர். வங்கி கணக்குகள் முடக்கம் காரணமாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சுமிட்டாய் விற்க தடை – தமிழக அரசு
குறித்து தமிழக உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்” கால நீட்டிப்பு கோரி வருமான வரித்துறையிடம் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வருமானவரி செலுத்தாததால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியது. பின்னர், முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமை என குழு நிர்வாகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.