உணவு நிறுவன ஊழியர்கள் 365 பேர் மீது வழக்குப்பதிவு..!
சென்னையில் 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.48,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.