11ம் வகுப்பு தேர்வில் 3,606 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை.!
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வெளியானது. இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது:
மொத்த தேர்ச்சி விகிதம் : 90.93%
மாணவிகள் : 94.36%
மாணவர்கள் : 86.99%
மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 90.93 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
100-க்கு 100 மதிப்பெண்:
11ம் வகுப்பு தேர்வில் 3,606 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதில் பாட வாரியாக பார்க்கையில்,
தமிழ் – 9
ஆங்கிலம் -13
இயற்பியல் – 440
வேதியியல் – 107
உயிரியல் – 65
கணிதம் – 17
தாவரவியல் -2
விலங்கியல் -34
கணினி அறிவியல் – 940
வணிகவியல் – 214
கணக்குப் பதிவியல் – 995
பொருளியியல் – 40
கணினிப் பயன்பாடுகள் – 598
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 132 பேர் என மொத்தம் 3,606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 995 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.