36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை… இபிஎஸ் தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்.!

1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு 20 – 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த தீர்மானத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த 14.2.1998இல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 இஸ்லாமியர்களுக்கு ஆயுள் தண்டனையும், 20 இஸ்லாமியர்களுக்கு மற்ற குற்ற தண்டனைகளும் வழங்ப்பட்டன. அவர்கள் சிறையில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் தண்டனை பெற்று விட்டனர்.
கடந்த 15.11.2023 ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையால் தான் 36 இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் அவர்கள் வயது மூப்பு, குடும்ப சூழ்நிலை , கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என இபிஎஸ் சட்டப்பேரவையில் பேசினார்.
இந்த கோரிக்கைகள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி, ஜவஹருல்லா,செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆயுள் தண்டனை கைதிகளுக்கு முன் விடுதலை என்பது 10 முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சிறை கைதிகளுக்கு வயது மூப்பு, இணை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதனை ஒழுங்குபடுத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை 22.10.2021 அன்று அமைத்து அந்த குழு அறிக்கை தாக்கல் செயப்பட்டது. அந்த குழுவானது 264 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய பரிந்துரை செய்தனர்.
இதனை அடுத்து அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு 49 கைதிகள் விடுதலை செய்ய தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது . அதிலும் இஸ்லாமிய சிறை கைதிகள் உள்ளனர். 264 சிறை கைதிகளில் 49 சிறை கைதிகள் தவிர்த்து மீதம் உள்ளவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 113 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு தண்டனை காலம் குறைக்கப்பட்டது என்றும்,
அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் 39 இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. தருமபுரியில் ஒரு பேருந்தை எரித்து அதில் கல்லூரி மாணவர்களை கொன்றவர்களை அதிமுக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்தது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
இதனை அடுத்து ஏற்பட்ட காரசார விவாதத்தினை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025