தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில்,

  • தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ்  பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்திடவும், சிறு, குறு தொழில் செய்திட ஏதுவாக, முகாம்களில் உள்ள 300 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுய உதவி குழுவுக்கும் தலா ரூ.1.25 ஆயிரம் வழங்கப்படும்.
  • அதன்படி, கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 321 சுய உதவி குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரத்துடன், மேலும், ரூ.75,000 வழங்கப்படும்.  இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.6,14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை குடும்பத்தலைவர்களுக்கு ரூ.1,500, குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.1,000 மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.21 கோடியே 49 லட்சம் செலவாகும்.
  • இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஒரு முறை ரூ.7 கோடி செலவினம் ஏற்படும். குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்கு, தலா ரூ.400 ஆணிய விலை வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு கோ ஆப்டெக்ஸில் வழங்கப்பட்டு வந்த இலவச ஆடை, மத்திய அரசு நிர்ணயித்த திட்டத்தில் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு  விலைப்புள்ளியின் அடிப்படையில்,  ரூ.1,790-, இருந்து, ரூ.3,473-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு ரூ.1,796 மதிப்பில், சேலம் இந்திய உருக்காலை  நிறுவனம் மூலம், உயர்தர பாத்திரங்கள் வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
  • இலங்கை தமிழர்களின் வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.261 கோடியே 54 லட்சம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய ரூ.12 கோடியே 25 லட்சம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 43 கோடியே 61 லட்சம் என மொத்தமாக ரூ.317 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும்.
  •  ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியும், கல்விக்காக ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500லிருந்து ₹10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்