ஆவின் நிறுவனத்தில் முறைகேடு காரணமாக அந்நிறுவன 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக ஏற்பட்ட புகார் எழுந்தது.மேலும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் பால் முகவர்கள் புகார் அளித்தனர்.
இதனால்,ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை தயார் ஆகி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,ஆவினில் முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,
மேலும்,இதுகுறித்து அமைச்சர் நாசர் அவர்கள் கூறுகையில்:”முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியதன் காரணமாக ஆவின் உற்பத்தியைக் கூட்டவும்,அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மக்களை சென்றடைய வேண்டிய உணர்வின் அடிப்படையில் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் 1.30 லட்சம் அளவிற்கு உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.அந்த வகையில்,அதிகாரிகளின் இடமாற்றத்தின் மூலம் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்”,என்று தெரிவித்தார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…