#Breaking:ஆவினில் முறைகேடு – 34 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்..!

Default Image

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு காரணமாக அந்நிறுவன 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக ஏற்பட்ட புகார் எழுந்தது.மேலும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் பால் முகவர்கள் புகார் அளித்தனர்.

இதனால்,ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை தயார் ஆகி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,ஆவினில் முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

  • சந்தை பிரிவு பொதுமேலாளர் ரமேஷ் குமார் – விழுப்புரம் ஜி.எம் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
  • முன்னதாக விழுப்புரம் ஜி.எம் ஆக இருந்த புகழேந்தி – சந்தை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • நிதிப் பிரிவு துணைப் பொது மேலாளர் – முத்துக் குமரன் உள்ளிட்ட 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,இதுகுறித்து அமைச்சர் நாசர் அவர்கள் கூறுகையில்:”முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியதன் காரணமாக ஆவின் உற்பத்தியைக் கூட்டவும்,அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மக்களை சென்றடைய வேண்டிய உணர்வின் அடிப்படையில் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் 1.30 லட்சம் அளவிற்கு உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.அந்த வகையில்,அதிகாரிகளின் இடமாற்றத்தின் மூலம்  உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்