கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள்…! மேலும் 3 மாவட்டங்களுக்கு 150 செறிவூட்டிகள் அனுப்பி வைப்பு…! – தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு 50 செறிவூட்டிகள் வீதம், 150 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பாக கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு 50 செறிவூட்டிகள் வீதம், 150 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம், அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தைச் (US-India Strategic Partnership Forum) சார்ந்த அமைப்பான, அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி (US-India Friendship Alliance), 486 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, தமிழ்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. சீனாவில் உள்ள ஃபோஷன் (Foshan) நகரிலிருந்து, வான்வழியாக புது தில்லிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சரக்கு விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 336 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் நிவாரண மையங்களில் பயன்படுத்தப்படும்.
அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தின் இந்த உதவிக்கு, தமிழ்நாடு அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தை சார்ந்த அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி அமைப்பு, தமிழ்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கிய 486 #oxygen செறிவூட்டிகளை, ஈரோடு, திருப்பூர், சேலம் & கோயம்புத்துர் மாவட்டங்களுக்கு அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்’ pic.twitter.com/kNv8DmO2hM
— DMK (@arivalayam) May 28, 2021