330 கோடிக்கு மது விற்பனை : டாஸ்மாக் பணியாளர் சங்கம்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ரூ.330 கோடிக்கு மேலாக மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.70 கோடிகள் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.260 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.