தமிழக அரசு அலுவலகங்களின் லஞ்ச ஒழிப்புத்துறை.! 33 லட்ச ரூபாய் பறிமுதல்.!
நேற்று தமிழகம் முழுவதும் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33.74 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டஙக்ளில் உள்ள அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசு அலுவலகங்களில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்சஒழிப்புத்துறை சோதனை :
அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த தொடர் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு மாவட்டங்கள் :
நெல்லை, தேனி , திருவண்ணாமலை, கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த சோதனை மாலை வரை தொடர்ந்தது.
33.74 லட்சரூபாய் :
இந்த சோதனையில், இலவசமாக செய்ய வேண்டிய வேலை, குறிப்பிட்ட கட்டணம் வாங்கி கொண்டு செய்ய வேண்டிய வேலை என நிர்ணயித்த அளவை விட அதிக பணம் வசூலிக்கப்பட்டதும், குறிப்பிட்ட ஆவணங்களும் இதில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் 33.75 லட்ச ரூபாய் பணம் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.