அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதில் என்ன தவறு.? பிரதமர் மோடியும் தான் பிரச்சாரம் செய்கிறார்.! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்.!
32 அமைச்சர்களும் 32 திமுக மாவட்ட செயலாளர்கள். அவர்கள் இங்கு இருந்தாலும் அரசு பணி என்பது நடைபெறத்தான் போகிறது. – ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது, திமுக நிர்வாகிகளும் முக்கியமாக திமுக அமைச்சர்கள் பெரும்பாலானோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
அமைச்சர்கள் பிரச்சாரம் : இது குறித்து இன்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 32 அமைச்சர்களும் 32 திமுக மாவட்ட செயலாளர்கள். அவர்கள் இங்கு இருந்தாலும் அரசு பணி என்பது நடைபெறத்தான் போகிறது. அவர்கள் அரசு கொடி மற்றும் அரசு வாகனத்தை பயன்படுத்த கூடாது என்பதே விதிமுறை. அதனை யாரும் மீறவில்லை. என கூறினார்.
பிரதமர் மோடி பிரச்சாரம் : மேலும், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தான் வருகிறார். அதனை பற்றி யாரும் கேட்கவில்லை. எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல மற்ற கட்சியினரும் வந்து வாக்கு சேகரிக்க வருகிறார்கள். நேற்று விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு தான் வருகிறார்கள் எனவும் கே.எஸ்.அழகிரி கூறினார் .