கல்லூரி இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!
திமுக ஆட்சி அமைத்த பிறகு இதுவரை 31 அரசு கலை கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. – அமைச்சர் பொன்முடி தகவல்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் தொகுதி பிரச்சனைகள் பற்றி கூறி வருகின்றனர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழக்த்தில் அரசு கலை கல்லூரி இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கு ஏற்ப ஆய்வு செய்து கலை கல்லூரி திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி அமைத்த பிறகு இதுவரை 31 அரசு கலை கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை தொகுதிகளில் மட்டுமே 3 கலைகல்லூரிகள் உள்ளன. சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கே மாணவர்கள் அதிக விருப்பம் காட்டி வருகின்றன. என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.