308 உதவி பொறியாளர் பணியிடங்கள்.. ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிட பணி – அமைச்சர்

தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வரும் பணிகள் குறித்து பேரவையில் அமைச்சர் எ.வே.வேலு விளக்கம்.
தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அமைச்சர் எ.வே.வேலு, ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. சம்பந்தபட்ட பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்ற அப்போதைய நிலைப்பாடே எங்களது இப்போதைய நிலைப்பாடு என தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். அண்ணாசாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அறிவித்தார். குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். பொதுப்பணித்துறையில் 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்தார். அதிமுகவை பகைவராக நங்கள் நினைக்கவில்லை. பகைவருக்கு உதவக்கூடியவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என்றும் பெருவிதம் கொண்டார்.