3,00,000 ரூபாய் செலவு செய்து 57,74,000 ரூபாய் பெற்ற நோயாளியின் குடும்பதினர்..!!
சிகிச்சையின் போது மரணம் அடைந்த நோயாளியின் குடும்பத்திற்கு 57 லட்சத்து 74 ஆயிரம் இழப்பீடு – அப்பலோ மருத்துவமனைக்கு உத்தரவு
கடந்த 2003-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபானிகுமார் என்பவர் மூல நோய் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .அப்போது அபானிகுமாரை பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுத்த மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், மயக்க மருந்து கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அபானி குமாரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் அபானிகுமாருக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது, என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, மயக்க மருந்து ஏன் கொடுக்கபட்டது என்பது தொடர்பான விவரங்களை அப்போலோ மருத்துவமனை முழுமையாக வழங்க தவறிவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது மரணத்துக்கு மருத்துவமனையும் மருத்துவர்களுமே காரணம் என்று கூறிய நீதிபதிகள் அபானி குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 44 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.
பெற்றோர்களின் மன உளைச்சலுக்காக 10 லட்சம் ரூபாய், அவர்கள் செலுத்திய 3 லட்ச ரூபாய், வழக்குச் செலவுக்காக10 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து 57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 6 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
DINASUVADU