இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.. முதல்வர் பழனிசாமி அதிரடி!
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் கிடைக்கும். அதன்பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், சட்டபடிப்பை முடித்து அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும்.
இதில் ஏழை குடும்பத்தில் இருந்து மாணவர்கள் பலர் இருக்கும் காரணத்தினால், புதிய திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவுத்துள்ளார். அதன்படி, இளம் வழக்கறிஞர் அனைவருக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை, 2 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.