‘3000 கிலோ அரிசி, 300 கிலோ மட்டன்’.! 15000 பேருக்கு இலவச பிரியாணி கொடுத்து அசத்திய முஸ்லிம்கள்.!

Default Image
  • திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.
  • இதில் 15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணிவுடன், முட்டைகளும் வைத்து அனைத்து சமுதாய மக்களும் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் முதற்கொண்டு பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கந்தூரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த நிலையில், ரசூலு இல்லா என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் சுமார் 3000 கிலோ அரிசி, 300 கிலோ மட்டன் கொண்டு பிரியாணியும் 200 கிலோ தயிர் கொண்டு வெங்காய பச்சடியும் சமைக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் சமையல் வேளையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நாகல் நகர் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களின் நிதியுதவி மற்றும் பொருளுதவியுடன் இந்த பிரியாணி தயார் செய்யப்பட்டது. இது அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த கந்தூரி விழாவில், நாகல்நகர், பாரதிபுரம், ரவுண்ட் ரோடு புதூர், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணிவுடன், முட்டைகளும் வைத்து வழங்கப்பட்டது, இது பள்ளிவாசல் வளாகத்தில் அதிகாலை முதல் மதியம் வரை வழங்கப்பட்ட பிரியாணியை கலந்துகொண்ட அனைத்து சமுதாய மக்களும் மற்றும் பாத்திரங்களோடு வந்தவர்களும் நீண்ட நேரம் வரிசையில் நின்று பிரியாணியை பெற்று சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்