கரையோர மக்கள் கவனத்திற்கு.! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றம்.!

Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மதகுகளில் 3 ஷட்டர்களிம் வழியாக 3000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது.

கனமழை காரணமாக வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால், ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து 100 கனஅடி நீர் திறக்க தொடங்கியது இன்று காலை 1000 கனஅடியாக இருந்தது.

இந்நிலையில், தற்போது  செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4297 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 3645  கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது 3,245 கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் 24 அடி முழு கொள்ளளவில்,  22.40 அடி நிரம்பி உள்ளது.

இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின் பேரில் 5 கண் மதகுகளில் 3 ஷட்டர்களிம் வழியாக 3000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்