தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 12 பேரும், அரசு மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 13 ஆம் நாளாக தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, 8 நாட்களில் 125 பேர் உயிரிழந்துள்ளது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…