தேர்தலுக்கு 30 லட்சம் தான் செலவழிக்க வேண்டும் என்பது சட்ட விதிமுறை. ஆனால், இங்கு இவிகேஎஸ்.இளங்கோவன் தரப்பு 90 லட்சம் செலவு செய்கிறார்கள். – அதிமுக குற்றசாட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கடுமையாக பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் . திமுக ஆளும் கட்சி என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும், அதிமுக எப்படியாவது இந்த தொகுதியை கைப்பற்றி தங்கள் பலத்தை கட்ட வேண்டும் எனவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக புகார் : இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இந்த இடைத்தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி அதிமுகவினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அவ்வப்போது தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனுக்களையும் அளித்து வருகின்றனர்.
90 லட்சம் செலவு : இந்நிலையில், இன்றும் அதே போல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து அதிமுக வழக்கறிஞர் அணி இன்பத்துரை பேசுகையில், தேர்தலுக்கு 30 லட்சம் தான் செலவழிக்க வேண்டும் என்பது சட்ட விதிமுறை. ஆனால், இங்கு இவிகேஎஸ்.இளங்கோவன் தரப்பு 90 லட்சம் செலவு செய்கிறார்கள். விதிமுறை படி, அவரது வாகனங்கள் இப்போதே பறிமுதல் செய்யப்பட்டு , இனி அவர் நடந்து தான் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். என கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார்.
திமுக கூட்டணிக்கு நோட்டீஸ் : மேலும், இந்த புகாரை அடுத்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். ஏற்கனவே நாங்கள் கொடுத்த புகாரின் பெயரில் இவிகேஎஸ்.இளங்கோவன் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். தேர்தல் விதிமுறைகள் மீறுவதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் எனவும் அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…