சென்னையில் 30 மணி நேர முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!

Default Image

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தளவில், சென்னையில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக, சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணிவரை 30 மணிநேர முழு ஊரடங்கை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தொரு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அத்தியாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

இந்த தடைகளை மீறி வெளியே வரும் வாகனங்களுக்கு, பிரிவு 144ன் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்