தொடங்கியது 30 மணிநேர ஊரடங்கு…மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் தேர்தல் முடிவு!!

Default Image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக அமலில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து நோய் பரவலை கருத்தில் கொண்டு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனிடையே, சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருப்பதால், சனிக்கிழமையும் இறைச்சி கடைகள் இயங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை இரவு ஊரடங்கும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தொடேன்ற்து 30 மணி நேரம் அதாவது இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த முழு ஊரடங்கு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பொருந்தாது. இதனால், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.

இதில் அவர்கள், 48 மணிநேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று அல்லது இருமுறை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும். அதேபோல், உடல்வெப்ப பரிசோதனையின் போது 98.6 க்கும் அதிகமாக இருக்கக்கூடாது. மேலும் வாக்கு எண்ணிக்கை அன்று முழு முடக்கம் என்பதால் வெற்றி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு முன்னரும், பின்னரும் எந்தவித கொண்டாட்டங்களும் கூடாது, ஊர்வலம் செல்வது மற்றும் பட்டாசு வெடிப்பது போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆகையால், நாளை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை நாளை எண்ணப்படுகிறது. இதில் தமிழகத்தில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்கு எண்ணிக்கையும் நாளை நடைபெறுவதால், அடுத்த ஆட்சியை யார் கைப்பற்றுவார்கள் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்