30% நிதி.. பேரு மட்டும் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’.! அமைச்சர் கடும் விமர்சனம்.!
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாள் நடைபெற்றது. இன்றைய நாளில் 2024-25ஆம் ஆண்டு தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் நிதி தமிழக அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.!
வீடுகட்ட 1.2 லட்சம் :
அவர் கூறுகையில், மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு செயற்படுத்தி வருவதாக சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் தமிழக அரசு தான் நிதியை ஒதுக்கி வருகிறது. மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமங்களில் வீடு கட்டுவதற்கு 1.2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு 48 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசின் 72 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா :
ஆனால், இந்த தொகை வீடு கட்டுவதற்கு போதாது என்பதால், மாநில அரசு கூடுதலாக 1.2 லட்சம் தருகிறது. அப்படி பார்த்தால், மொத்தம் உள்ள 2.4 லட்சம் ரூபாயில் மத்திய அரசு 72,000 மட்டுமே தெரிகிறது. தமிழக அரசி 1.68 லட்சம் ரூபாய் தருகிறது. ஆக 30 சதவீதம் மட்டுமே மத்திய அரசு நிதி தருகிறது. ஆனால் பெயர் மட்டும் ” பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” பேரு மட்டும் பெரிசாக இருக்கிறது ஆனால் நிதி குறைவாக இருக்கிறது.
கலைஞரின் கனவு இல்லம் :
மேலும், ஆதிதிராவிடருக்கு கான்கிரீட் வீடு வழங்கியது கலைஞர் ஆட்சி காலத்தில் தான். 1970ஆம் ஆண்டிலேயே குடிசை மாற்று வாரியம், திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, அவை 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற பெயரில் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஒரு வீடு கட்டுவதற்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்காக 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராம சாலை திட்டம் :
அதேபோல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1.5 லட்சம் ரூபாய் மத்திய அரசு கொடுக்கிறது. 7 லட்சம் ரூபாயை மத்திய அரசு கொடுக்கிறது. தமிழக அரசின் கிராம சாலை திட்டமானது தமிழக அரசின் முழு செலவின் கீழ் செயல்படுத்தப்பட்ட வருகிறது. ஆனால் மத்திய அரசு அறிவித்த பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் தெற்கு 1945 கோடி ரூபாய் வரைவு செய்யப்பட்டு மத்தியரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை ஒரு ரூபாய் கூட அவர்கள் ஒதுக்கவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.