பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் திரு. ஏ.ஜி. பேரறிவாளன் (சிறைக் கைதி எண் 7640) அவர்களுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் திருமதி டி அற்புதம்மாள் அவர்கள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாயின் அவர்கள், திரு. ஏ.ஜி. பேரறிவாளன் அவர்களுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…