பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு..!

Default Image

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என  அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் திரு. ஏ.ஜி. பேரறிவாளன் (சிறைக் கைதி எண் 7640) அவர்களுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் திருமதி டி அற்புதம்மாள் அவர்கள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாயின் அவர்கள், திரு. ஏ.ஜி. பேரறிவாளன் அவர்களுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan
Virat kohli argument with Australian player Sam konstas