30 சதவீத மாணவர்கள் கூட சேராத தமிழக பொறியியல் கல்லூரிகள்: 142 இருந்து 177 ஆக உயர்வு
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற 3,325 தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 526 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த கல்வியாண்டில் 177 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, திறமையான ஆசிரியர்கள், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத தரம் குறைந்த கல்லூரிகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அவ்வாறு தரம் குறைந்த கல்லூரிகள் மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றன. இதற்கு தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை மூட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்