16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்!குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர்!
- கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள்.
- அந்த இளைஞர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி அப்பகுதியில் அந்த சிறுமி தனது காதலனுடன் தெருவில் நடந்து சென்றுள்ளன.அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியின் காதலரை தாறுமாறாக தாக்கிய அந்த கும்பல் சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் குற்றவாளிகளை தேடி வந்த காவல்துறையினர் மணிகண்டன்,பப்ஸ் கார்த்தி, ராகுல்,பிரகாஷ்,கார்த்திகேயன்,நாராயண மூர்த்தி ஆகிய 6 பேரை போக்சோ சட்டத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
மேலும் அதில் கைது செய்யப்பட்ட மணிகண்டன்,ராகுல் ,கார்த்தி ஆகிய மூவர் முக்கிய குற்றவாளி என்பதால் அவர்களுக்கு குண்டர் சத்தத்தில் வழக்கு பதிவு செய்ய கமிஷனருக்கு அரசு மகளீர் காவல்துறை அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.
பின்னர் கமிஷனரின் உத்தரவின்படி அந்த மூன்று நபர்களுக்கும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.