15வயது சிறுமியின் குளிக்கும் வீடியோவை எடுத்து மிரட்டிய 3 இளைஞர்கள் கைது.!

குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்துள்ளார். தற்போது போலீசாரால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி உடனடியாக தனது சித்தியிடம் 5ஆயிரம் பணத்தை கேட்க, அவர் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம் என்றும், போலீஸில் புகார் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
அதனையடுத்து மீண்டும் அந்த இளைஞர்கள் சிறுமிக்கு போன் செய்து தாங்கள் கூறும் இடத்திற்கு வரவில்லை என்றால், குளியல் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனடியாக, அவர்கள் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர்களிடம் சண்டை போட்டு, அதில் ஒருவரின் மொபைலை வாங்கி பார்த்த போது தனது பாட்டி உட்பட பலர் குளிக்கும் வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் வீடியோவை டெலிட் செய்துள்ளார்.
அதன் பின் மீண்டும் அவர்களிடமிருந்து மிரட்டல் வர, சிறுமி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடனடியாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உடனடியாக அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த இளைஞர்கள் செய்த தகாத செயலால் சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025