3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய பாலகிருஷ்ணா வழக்கில் பிற்பகலில் உத்தரவு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை:
திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
இதன் பின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதன் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்.எனக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.தீர்ப்புக்கு தடைவிதிக்கவேண்டும்.”நான் அந்த வழக்கில் 72-வது குற்றவாளி” . “காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு உள்ளது “.காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை .தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த உயர்நீதிமன்றம் ,பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிகிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது . பாலகிருஷ்ணன்ரெட்டி அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச்செல்வதில் முன் மாதிரியாக இருக்க வேண்டும். 3ஆண்டு சிறைதண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையேஏன் தடுக்கவேண்டும்.ஏன் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதிரியாக இருக்கனும்.ஏன் தீர்பை தடை செய்ய வேண்டும்.பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ்நீதிமன்றம்அளித்ததீர்ப்பு தவறுஎன கூறுகிறீர்களா? என்றும் தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள் என்றும் கேள்வி எழுப்பியது .காவல்துறையின்விளக்கத்தைஎழுத்துப்பூர்வமாகதாக்கல்செய்ய வேண்டும்.
பின்னர் தண்டனைக்கு தடை கோரிய பாலகிருஷ்ணா வழக்கில் பிற்பகலில் உத்தரவு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…