3 ஆண்டுகள் சிறை தண்டனை:தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Published by
Venu

 

  • தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
  • 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
  • பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை:

திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது  விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இதன் பின்  3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 

 

இதன் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்.எனக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.தீர்ப்புக்கு தடைவிதிக்கவேண்டும்.”நான் அந்த வழக்கில் 72-வது குற்றவாளி” . “காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு உள்ளது “.காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை .தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த உயர்நீதிமன்றம் ,பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிகிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது . பாலகிருஷ்ணன்ரெட்டி அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச்செல்வதில் முன் மாதிரியாக இருக்க வேண்டும். 3ஆண்டு சிறைதண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையேஏன் தடுக்கவேண்டும்.ஏன் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதிரியாக இருக்கனும்.ஏன் தீர்பை தடை செய்ய வேண்டும்.பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ்நீதிமன்றம்அளித்ததீர்ப்பு தவறுஎன கூறுகிறீர்களா? என்றும் தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்  என்றும்  கேள்வி எழுப்பியது .காவல்துறையின்விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு:

இந்நிலையில்  பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.பாலகிருஷ்ணரெட்டி விடுத்த கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

2 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

5 minutes ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

1 hour ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

1 hour ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

2 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

3 hours ago