Dead [Representative Image]
விருதுநகர்: பட்டாசு ஆலை தீவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதில் பரிதாபமாக தொழிலாளர்கள் உயிரிழக்கும் சோக நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பந்துவார்பட்டியில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 3 அறைகள் வெடித்து சிதறி சேதமடைந்தன. மேலும், பட்டாசு முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தற்போது மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் வருவாய் துறையினர், காவல்துறையினர் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…