Puducherry [file image]
புதுச்சேரி : ரெட்டியார் பாளையத்தில் கழிவறையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான விஷ வாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால், கழிவறையில் மயங்கி விழுந்த மூதாட்டியை தூக்குவதற்கு சென்ற அவரது மகளும், பேத்தியும் அடுத்தடுத்த மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், 2 பேர் விஷவாயுத்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, விஷ வாயு தாக்கியதில் செந்தாமரை (80), காமாட்சி (55), மற்றும் சிறுமி செல்வராணி (15) உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…