திருநெல்வேலி திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கம்.! காரணம் என்ன.?
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்களை மற்றும் திமுக கட்சி பிரதிநிதி ஒருவர் என மொத்தம் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக அவ்வபோது ஒரு சில திமுக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் கூட மேயர் மற்றும் துணை மேயர் வராத காரணத்தால் திமுக கவுன்சிலர்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டது அப்போது பேசுபொருளாக மாறியது
திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று – வானதி சீனிவாசன்
திமுக கவுன்சிலர்ளின் இந்த சம்பவங்களை தொடர்ந்து நேற்று திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி திமுக மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7 வார்டை சேர்ந்த திமுக பிரதிநிதி சுண்ணாம்புமணி எனும் ஆர்.மணி ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சி கட்டுப்பாட்டு மீறி செயல்பட்டதாக கூறியும், கழகத்திற்கு அவபெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் கூறியும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.