வாக்கு என்னும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு : ஏ.கே.விஸ்வநாதன்
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைவரும் வாக்கு என்னும் நாளுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அண்ணா பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.