மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட முதல் நாளே கடலில் சிக்கி 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதையடுத்து மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மன நிலை கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள சில கடற்கரைகளுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பல நாட்களுக்கு பின் கடற்கரைக்கு செல்லும் ஆர்வத்தில் உற்சாகமாக கடற்கரைகளுக்கு சென்று வருகின்றனர். இன்று மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சென்னை வேளச்சேரியை சேர்ந்த 3 மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்த முதல் நாளே 3 பேர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…