கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.
கார் மோதி மாணவர்கள் உயிரிழப்பு:
வாணியம்பாடி அருகே கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். வளையம்பட்டு பகுதியில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. கார் மோதியதில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த நிலையில், கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு:
இதுதொடர்பான அறிவிப்பில், திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக் (வயது 13), விஜய், (வயது12), மற்றும் சூர்யா, (வயது 10) ஆகிய 3 மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.