Devakottai Accident [File Image]
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உட்பட 12 பேர் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு டாடா ஏஸ் வேனில் சென்றார்கள்.
அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பு கொண்டு இருந்த சமயத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் இன்று அதிகாலை அருகே வந்த லாரி மீது டாடா ஏஸ்
வேண் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.. அமைச்சர் சேகர்பாபு
இந்த கோர விபத்தில் அழங்குளத்தைச் சேர்ந்த என்.நம்புராஜன் (60), அவரது மனைவி காளியம்மாள் (55) மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் ஐ.முகமது அன்வர் (38) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படு காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை செய்தும் வருகிறார்கள்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…