3 பேர் உயிரிழப்பு 3 அறைகள் தரைமட்டம்.! பற்றி எறிந்த பட்டாசு தொழிற்சாலை.!
- விருதுநகரில் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டம் ஆகி 3 பேர் உயிரிழந்த சமானம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சட்டத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சூர்யா பிரபா என்ற பட்டாசு ஆலையில் அப்பகுதியே சேர்ந்த ஏராளமான தொழிலார்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) காலை வழக்கம்போல் தொழிலார்கள் ஆலைக்கு சென்ற நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டம் ஆகிய நிலையில், பணிபுரிந்த தொழிலார்கள் வள்ளியம்மாள், விஜயகுமார் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த பட்டாசு விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முயற்சி செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.