BREAKING: மேற்கூரை இடிந்து விழுந்து…சம்பவ இடத்திலேயே 3 பேர் மரணம்!

death

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழமையான சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து விழுந்து, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கொழுமம் கிராமத்தில் வேலைக்கு செல்வதற்கு பேருந்துக்காக சமுதாய கூடத்தில் காத்திருந்த மணிகண்டன், கௌதம், முரளி ராஜன் ஆகிய மூவர் அருகே கனமழையால் சேதமடைந்து இருந்த பழமையான மேற்கூரை இடிந்து விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனயாக காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், மேற்கூரை ஈடுபாடிகளில் சிக்கியிருந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உயிரிழந்த உடல்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்ல காத்திருந்த 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்