வெடி வைத்து கிணறு தோண்டியதில் 3 பேர் உயிரிழப்பு..!
தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள ராம்நகரில் தனியார் நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்துள்ளது. இந்த பணியில் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் என்பாரின் குழு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கிணறு தோண்டுவதற்காக கிணற்றிற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள வெடி எதிர்பாராமல் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அரவிந்த் மற்றும் ஆசீர் சாம்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.