கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 3 புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவையில் உள்ள பொள்ளாச்சியில் ரூ. 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலையை அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பூமி பூஜை நடத்தி வைத்தார் . அதில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ பயில்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகளை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்திலும், நாட்டு இன நாய்களை பாதுகாக்கும் பொருட்டிலும் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்திருந்த அமைச்சர், தற்போது கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்காவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…