3 புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் – கால்நடைத்துறை அமைச்சர்.!

கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 3 புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவையில் உள்ள பொள்ளாச்சியில் ரூ. 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலையை அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பூமி பூஜை நடத்தி வைத்தார் . அதில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ பயில்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகளை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்திலும், நாட்டு இன நாய்களை பாதுகாக்கும் பொருட்டிலும் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்திருந்த அமைச்சர், தற்போது கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்காவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025