சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பாய்ந்தது..!
சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 போக்சோ வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் மாதம் டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அப்போது சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவிகள் அளித்த புகார் அடிப்படையில் மேலும் 2 போக்சோ மற்றும் ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சிவசங்கர் பாபா மீது இதுவரை 7 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.