காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் -திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.அரசுக்கு எதிராக பேசிய நிலையில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது.
இதன் பின் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தநமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 14-ஆக குறைந்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.வருகின்ற 22-ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சியில் உள்ள மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…